Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 08, வியாழக்கிழமை
Niroshini / 2021 ஓகஸ்ட் 09 , மு.ப. 10:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ். நிதர்ஷன்
வவுனியா பல்கலைக்கழகத்தின் ஆரம்ப விழா, கொரோனா அபாயம் காரணமாக பிற்போடப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, அரசாங்க நிகழ்வுகள், விழாக்கள் எதனையும் நடத்த வேண்டாம் என அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டுள்ள நிலையிலேயே, இந்த நிகழ்வு பிற்போடப்பட்டிருப்பதாக, வவுனியா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கலாநிதி
த. மங்களேஸ்வரன் அறிவித்துள்ளார்.
நாட்டின் தற்போதைய சூழ்நிலை காரணமாக, ஆரம்ப நிகழ்வு பிற்போடப்பட்டு உள்ளதாகவும், நிகழ்வுக்கான புதிய திகதி குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்றும், வவுனியா பல்கலைக்கழகத் துணைவேந்தர் கலாநிதி த. மங்களேஸ்வரன் அழைக்கப்பட்டவர்களுக்கு அனுப்பி வைத்துள்ள மின்னஞ்சலில் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் 11ஆம் திகதி, புதன்கிழமை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில், பம்பைமடுவில் அமைந்துள்ள வவுனியா பல்கலைக்கழக வளாகத்தில், இந்த நிகழ்வு நடைபெறவிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
51 minute ago
53 minute ago
1 hours ago