Editorial / 2018 ஏப்ரல் 02 , பி.ப. 04:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
க. அகரன்
வவுனியா பிரதேச செயலக ஊழியர்கள், அசமந்தமாகப் போக்குடன் செயற்படுவதாக, பலராலும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
பிரதேச செயலகத்தின் காணி தொடர்புடைய பிரிவுக்கு, பொதுமக்கள் தங்கள் தேவை குறித்துச் சென்றாலும், அங்குள்ள ஊழியர்கள், தேவைகளை நிறைவேற்றித் தருவதில்லை என்றும் ஒரு வேலையைச் செய்துகொடுப்பதற்கு, பல வாரங்கள் எடுத்துக்கொள்வதாகவும் சில வேலைகள், ஆண்டுகணக்கில் இழுத்தடிக்கப்படுவதாவும் பாதிக்கப்பட்டோர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
அத்தோடு, தூர பிரதேசங்களில் இருந்து செல்வோரை, “நாளை வாருங்கள்” என்று கூறிய அனுப்பி வைப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, காணி பிரிவில், வெளிக்கள உத்தியோகத்தர் ஒருவர், விடுமுறையில் சென்றிருந்தால், அவரிடம் ஒப்படைக்கப்பட்ட பணி, அவர் விடுமுறையிலிருந்து திரும்பி வரும் வரையில் கிடப்பிலேயே, உள்ளதாகவும் பதில் கடமைக்கு கையொப்பமிட்டவர்கள், இது தொடர்பில் கருத்தில் கொள்வதில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பாக, பிரதேச செயலாளர் உரிய கவனம் செலுத்தாமையே, இதற்கு காரணம் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
வவுனியா பிரதேச செயலகத்தின் காணிப் பிரிவின் அசமந்தப் போக்கு தொடர்பாக, வவுனியா மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்திலும் முன்னாள் வட மாகாணசபை உறுப்பினர் செ. மயூரன், தனது அதிருப்தியை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago