2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

வவுனியா மனித உரிமை வலய செயலணி அங்குரார்ப்பணம்

க. அகரன்   / 2018 நவம்பர் 29 , பி.ப. 03:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

வவுனியா பிரதேச மட்ட மனித உரிமை வலய செயலணியின் அங்குரார்ப்பண நிகழ்வும் கருத்தமர்வும் இன்று (29) காலை விருந்தினர் விடுதி ஒன்றில் இடம்பெற்றது.

வவுனியா மாவட்ட மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளர் எம்.ஆர்.பிரியதர்சன மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் சட்டத்தரணி ஆர்.எல்.வசந்தராஜ் தலைமையில் இடம்பெற்றது.

இன்றைய கருத்தமர்வில் மனித உரிமைகள் மீறல்களை வெளிக்கொண்டு வருதல் மற்றும் சட்டரீதியிலான தெளிவூட்டல்களை வழங்குதல் ஆகியன தொடர்பான தௌவூட்டல்களை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் சட்டத்தரணி ஆர்.எல்.வசந்தராஜ் வழங்கினார்.

இந்நிகழ்வில் வவுனியா மாவட்ட சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் பொதுமக்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .