2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

வவுனியா முஸ்லீம் மகாவித்தியாலய மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

க. அகரன்   / 2018 நவம்பர் 16 , பி.ப. 12:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

வவுனியா முஸ்லீம் மகாவித்தியாலய மாணவர்கள் இன்று (16) பாடசாலைக்கு முன்பாக ஆர்பாட்டம்  ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.

கடந்த புதன்கிழமை (14) பாடசாலைக்கான சத்துணவு திட்டத்தின் கீழ் பாடசாலைக்கு வழங்கப்பட்ட ரின்மீனில் ஊழல் நடைபெற்றிருப்பதாக தெரிவித்து பாடசாலையை சிலர் முற்றுகையிட்டிருந்தனர்.

பின்னர் கோட்டக்கல்வி அதிகாரி வருகைதந்து குறித்த விடயம் தொடர்பாக ஆராய்ந்திருந்ததுடன் ஊழல்கள் நடைபெறவில்லை என்று தெரிவித்திருந்தார். 

எனவே போலியான குற்றசாட்டுகளை முன்வைத்து சிலர் பாடசாலைக்கும், அதிபருக்கும் அபகீர்த்தியை ஏற்படுத்துவதாக தெரிவித்தே இன்று மாணவர்கள் போராட்டதில் ஈடுபட்டனர்.

பாடசாலை முன்பாக ஒன்று கூடிய மாணவர்கள் பாடசாலைக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தியவர்களை கைது செய்ய வேண்டும் எனவும், தவறான தகவல்களை வெளியிட்டு பாடசாலைக்கு அபகீர்த்தி ஏற்படுத்த வேண்டாம் என கோசங்களை எழுப்பினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .