2025 ஓகஸ்ட் 09, சனிக்கிழமை

வவுனியா வளாகத்தின் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம்

க. அகரன்   / 2017 டிசெம்பர் 16 , பி.ப. 01:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

“மாணவர்களுக்கிடையிலான முரண்பாடுகளால் மூடப்பட்டிருந்த வவுனியா வளாகத்தின் கல்வி நடவடிக்கைகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது” என, வளாகத்தின் முதல்வர் கலாநிதி த. மங்களேஸ்வரன் தெரிவித்தார்.

கடந்த நவம்பர் மாதம் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வே. பிரபாகரனின் பிறந்நாளை யாழ். பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்துக்குள் கொண்டாடியமையால் மாணவர்களுக்கு இடையில் கைகலப்பு ஏற்பட்டிருந்தது.

இதனையடுத்து வவுனியா வளாகம் காலவரையரையின்றி மூடப்பட்டிருந்ததுடன், விடுதிகளில் இருந்த மாணவர்களும் உடனயடிக வெளியேற்றப்பட்டனர்.

இந்நிலையில், யாழ். பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தின் கல்வி நடவடிக்கைகள், கடந்த 13 ஆம் திகதியில் இருந்து மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, விடுதிகளில் தங்குவதற்கு தகுதிபெற்றவர்கள் கடந்த 13ஆம் திகதியில் இருந்து தங்குவதற்கும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பிரத்தியேக விஞ்ஞான பீடம் மற்றும் வியாபார கற்கைகள் பீட மாணவர்களுக்கான பரீட்சைகள் யாவும் 2.01.2018ஆம் திகதியில் இருந்து ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் முதல்வர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .