2024 ஏப்ரல் 29, திங்கட்கிழமை

வவுனியா விபத்தில் 2 படையினர் பலி

Janu   / 2023 ஒக்டோபர் 10 , மு.ப. 07:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

வவுனியா வெளிக்குளம் பகுதியில் திங்கட்கிழமை (9) இரவு இடம்பெற்ற விபத்தில் விசேட அதிரடிப்படையை சேர்ந்த இருவர் உயிரிழிந்ததுடன் 6 பேர் படுகாயமடைந்தாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதிரடிப்படைக்கு சொந்தமான ஜீப் ரக வண்டி ஒன்று மடுகந்தை பகுதியில் உள்ள பொலிஸ் விசேட அதிரடிப்படை முகாமில் இருந்து வவுனியா நோக்கி பயணித்து கொண்டிருக்கு போது , வெளிக்குளம் பகுதியில் வீதியின் குறுக்கே சென்ற மாட்டுடன் மோதியே இவ்வாரு விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வவுனியா- ஹொரவ்பத்தானை வீதியின் கோவில்குளம் பகுதியில் சுற்றித் திரிந்த மாடு மீது பொலிஸ் விசேட அதிரடிப்படையின் டிஃபென்டர் மோதிய விபத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படையின் இரு சிப்பாய்கள் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 05 பேர் காயமடைந்துள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர். 

விபத்தில் உயிரிழந்தவர்கள் குருநாகல் கும்பக்வெவ பொலிஸ் கான்ஸ்டபிள் ஹேரத் முதியன்செலகே ஹசித தினேஷ் மதுசங்க மற்றும் மெதவாச்சிய புகையிரத நகர பொலிஸ் கான்ஸ்டபிள் யாப்பமுடியசெல சுபுன் பிரதீபண ஆகியோரே மரணமடைந்துள்ளனர்.

வவுனியா மடுகந்த பொலிஸ் விசேட அதிரடிப்படை முகாமுக்கு சொந்தமான டிபெண்டர் வாகனம் மடுகந்தவிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த போதே கோவில்குளம் பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

மாடு மீது மோதிய டிபெண்டர், வீதிக்கு அருகில் இருந்த சுவரை உடைத்து டிபெண்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக பொலிஸார் கூறுகின்றனர்.

கடந்த காலங்களில் இந்த வீதிகளில் ஏற்பட்ட விபத்துக்களால் மாடுகள் உயிரிழந்துள்ளன. அத்துடன் காயமடைந்தும் உள்ளன. எனினும்,   கால்நடைகளை கட்டுப்படுத்த அதிகாரிகளோ, மாடு உரிமையாளர்களோ நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X