Editorial / 2023 ஓகஸ்ட் 17 , பி.ப. 06:46 - 0 - {{hitsCtrl.values.hits}}

க. அகரன்
வவுனியா ஈரற்பெரியகுளம் பகுதியில் வியாழக்கிழமை (17) மாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் மரணமடைந்துள்ளார்.
வவுனியாவில் இருந்து ஈரற்பெரியகுளம் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளும் அனுராதபுரத்தில் இருந்து வவுனியா நோக்கி வந்து கொண்டிருந்த டிப்பர் ரக வாகனமும் நேருக்கு நேர் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றது.
மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் படுகாயமடைந்த நிலையில் சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளதுடன் வாகனத்தின் சாரதி சிறுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.
விபத்து தொடர்பாக ஈரற்பெரியகுளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .