2025 மே 17, சனிக்கிழமை

வவுனியா வைத்தியசாலைக்கு வந்தவருக்கு யாழுக்கு மாற்றம்

Editorial   / 2020 மார்ச் 15 , மு.ப. 10:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

வவுனியா வைத்தியசாலைக்கு கொரோனா வைரஸ் தனக்கு உள்ளதா என சிகிச்சைக்கு வந்தவர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக, வவுனியா வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றது. 

வவுனியாவைச் சேர்ந்த பிரஜையொருவர், வியாழக்கிழமை (12) இரவு தான் சீன பிரஜை ஒருவரை அண்மையில் சந்தித்தமையால் தனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதா என்பது தொடர்பில் சந்தேகத்தில் வவுனியா பொது வைத்தியசாலைக்கு வந்திருப்பதாகத் தெரிவித்தார்.

இந்நிலையில், அவரை மேலதிக பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்ததாகவும், வைத்தியசாலை தகவல் தெரிவிக்கின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .