Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
Niroshini / 2021 நவம்பர் 02 , பி.ப. 03:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க. அகரன்
வவுனியாவில் இடம்பெறும் சிங்களக் குடியேற்றத்தை கண்டித்து, எதிர்வரும் 10ஆம் திகதியன்று, நெடுங்கேணியில் அமைந்துள்ள வவுனியா வடக்கு பிரதேச செயலகத்துக்கு முன்பாக பாரிய ஆர்ப்பாட்டத்தை நடத்துவதற்கு, தமிழ்க் கட்சிகள் தீர்மானித்துள்ளன.
அநுராதபுரம் வடக்கின் சில கிராமங்களை எல்லை நிர்ணயம் என்ற போர்வையில், வவுனியா வடக்கு பிரதேச செயலகத்துடன் இணைப்பதற்கான முனைப்பை அரசாங்கம் எடுத்துள்ள நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததே, குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சிவசக்தி ஆனந்தன், எம். தியாகராசா, தமிழரசுக் கட்சியின் வவுனியா அமைப்பாளர் ந. கருணாநிதி. தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் சார்பில் ஜி.ரி.லிங்கநாதன், மாக்ஸிச லெனினிச கட்சி பிரமுகர் இ.பிரதீபன், ஜனநாயக போராளிகள் கட்சி உறுப்பினர், வவுனியா வடக்கு பிரதேச சபை தவிசாளர் எஸ். தணிகாசலம் உட்பட உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு, குறித்த விடயம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட நீண்ட கலந்துரையாடலின் பின்னர், எதிர்வரும் 10ஆம் திகதி காலை 10 மணிக்கு, ஆர்ப்பாட்டத்தை முன்னெடுப்பது என தீர்மானித்துள்ளனர்.
குறித்த போராட்டத்துக்கு, அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளும் பொதுமக்களும் கலந்துகொண்டு, சிங்களக் குடியேற்றத்துக்கு எதிராக குரல் கொடுக்க முன்வரவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago