Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 நவம்பர் 28 , பி.ப. 02:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க. அகரன்
வவுனியாவில், கடந்த16 வருட காலப் பகுதியில், 25 பேர் எயிட்ஸ் தொற்றுக்குள்ளாகியிருப்பது இனங்காணப்பட்டுள்ளதாக, வவுனியா மாவட்டப் பாலியல் நோய், எயிட்ஸ் தடுப்புவேலைத்திட்டத்தின் பொறுப்பு வைத்திய அதிகாரி கு.சந்திரகுமார் தெரிவித்தார்.
இது குறித்து தொடர்ந்துரைத்த அவர், இலங்கையில், இதுவரை 3,507 எயிட்ஸ் நோயாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனரெனவும் அவர்களில் 2,391 ஆண்களும் 1,116 பெண்களும் காணப்படுகின்றனரெனவும் தெரிவித்தார்.
வவுனியா மாவட்டத்தில், 2003மஆம் ஆண்டிலிருந்து இன்று வரையான காலப்பகுதியில், 25 எயிட்ஸ் நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளனரெனத் தெரிவித்த அவர், நடப்பாண்டில் இதுவரையான காலப்பகுதியில், ஒரு நோயாளி இனங்காணபட்டுள்ளதாகவும் கூறினார்.
அவர்களில் 12 பேர் மாத்திரமே உயிருடன் இருப்பதாகவும், அவர் தெரிவித்தார்.
வவுனியாவை பொறுத்தவரை, எயிட்ஸ் நோய்த் தொற்று ஏற்படுவதற்கு, விபபசாரமே பிரதான காரணமெனத் தெரிவித்த சந்திரகுமார், வேறு மாவட்டங்களில் இருந்தும், விபசாரதொழிலாளர்கள் இங்கு வருகை தருகின்றனரெனவும் கூறினார்.
26 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
1 hours ago