Editorial / 2021 டிசெம்பர் 01 , பி.ப. 12:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
க. அகரன்
உலக எயிட்ஸ் தினம், டிசெம்பர் மாதம் முதலாம் திகதி நினைவுகூரப்படுகிறது.
அந்தவகையில், இலங்கையில் இம்முறை “சமத்துவமின்மையை ஒழிப்போம், எயிட்ஸ்சை ஒழிப்போம், பெருந்தொற்றை ஒழிப்போம்” எனும் தொனிப்பொருளில் அனுஷ்டிக்கப்படுகின்றது.
இதனையடுத்து, எயிட்ஸ் நோய் தொடர்பான விழிப்புணர்வு ஊர்வலம், வவுனியா பொது வைத்தியசாலையின் மாவட்ட பாலியல் நோய்தடுப்பு தடுப்புப் பிரிவின் ஏற்பாட்டில், இன்று (01) நடைபெற்றது.
வவுனியா பொது வைத்தியசாலையில் இருந்து ஆரம்பமான ஊர்வலம், குருமன்காட்டு சந்தி ஊடாக, வைரவ புளியங்குளம் சென்று, வவுனியா நகரம் ஊடாக மீண்டும் வைத்தியசாலையை வந்தடைந்தது.
இவ்விழிப்புனர்வு ஊர்வலத்தில் ஓட்டோ உரிமையாளர் சங்க உறுப்பினர்கள் மற்றும் சுகாதாரத் திணைக்கள உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
முன்னதாக காலை 10 மணிக்கு வவுனியா வைத்தியசாலையில் எயிட்ஸ் நோய் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு ஒன்றும் நடைபெற்றிருந்தது. குறித்த செயலமர்வில் வைத்தியசாலை பணிப்பாளர் இ. ராகுலன், விசேட வைத்திய நிபுணர் இளங்குமரன், வைத்தியர்கள் மற்றும் தாதிய உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.
8 hours ago
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago
9 hours ago