2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

வவுனியாவில் கடும் மழை: 50 பேர் பாதிப்பு

Niroshini   / 2021 ஜனவரி 11 , பி.ப. 01:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அகரன்

வவுனியா மாவட்டத்தில், இன்று (11) பெய்த அடைமழை காரணமாக, 14 குடும்பங்களைச் சேர்ந்த 50 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பூந்தோட்டம், சிறிநகர், கருப்பணிச்சாங்குளம் ஆகிய பகுதிகளில் உள்ள மக்களே, இவ்வாறு பாதிக்கப்பட்டுளளனர். பாதிக்கப்பட்டவர்கள், அப்பகுதி பொதுமண்டபத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

குறிப்பாக வவனியா நகர்ப் பகுதியில், இன்றுக் காலை 8.30 மணியிலிருந்து 11.30 மணிவரையில், 54 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

இதேவேளை, இன்றுக் காலை 8.30 மணிவரையான கடந்த 24 மணித்தியாலங்களில், ஓமந்தையில் 85 மில்லிமீற்றரும் வவுனியாவில் 31.5 மில்லி மீற்றரும், செட்டிகுளத்தில் 28.0 மில்லிமீற்றரும், நெடுங்கேணியில் 37 மில்லிமீற்றரும், உலுக்குளத்தில் 50.6 மில்லிமீற்றரும் மழைவீழ்ச்சியும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .