2025 ஓகஸ்ட் 09, சனிக்கிழமை

வவுனியாவில் கட்டுப்பணம் செலுத்தியது தமிழ் தேசியக்கூட்டமைப்பு

க. அகரன்   / 2017 டிசெம்பர் 16 , பி.ப. 01:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

வவுனியா மாவட்டத்தில் 4 உள்ளுராட்சி மன்றங்களுக்கான கட்டுப்பணத்தினை தமிழ் தேசியக் கூட்டமைப்பு ,நேற்று(15)செலுத்தியது.

வவுனியா மாவட்ட செயலகத்தில், தமிழரசுக்கட்சியின் வவுனியா மாவட்ட தலைவரும் வட மகாணசபை உறுப்பினருமான ப. சத்தியலிங்கம் தலைமையில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டிருந்தது.

வவுனியா நகரசபை, வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை, வவுனியா வடக்கு பிரதேச சபை, வெங்கல செட்டிகுளம் பிரதேசசபை என்பவற்றுக்கே இவ்வாறு கட்டுப்பணம் செலுத்தியிருந்தது. 

இதன்போது கருத்து தெரிவித்த வட மாகாணசபை உறுப்பினர் ப. சத்தியலிங்கம்,

கடந்த ஆட்சியில் நெடுங்கேணி பிரதேசத்தின் தெற்கு எல்லையில் தமிழ்மக்களின் பூர்வீக நிலங்கள் அபகரிக்கப்பட்டு, அப்பகுதியில் நாசூக்காக திட்டமிட்டு பெரும்பான்மையின குடியேற்றங்களை அமர்த்தினர்.

இந்தக் குடியேற்றங்கள் கடந்த அரசில் இராணுவத்தின் பிரசன்னத்துடன் இருந்தமையினால், பொதுமக்களுக்கு தடை செய்யப்பட்ட பிரதேசங்களாக  பிரகடனப்படுத்தி நன்கு திட்டமிட்ட வகையில் குடியேற்றங்கள் நடந்தேறியுள்ளது. 

இந்நிலையில் உள்ளுராட்சி மன்றங்களின் மீள்எல்லை நிர்ணயசபைக்கு நான் பலதடவை கோரிக்கைகளை முன் வைத்து கடிதங்கள் எழுதியிருந்தேன். ஆகக்குறைந்தது அந்த குடியேற்றங்களை பெரும்பான்மையின மக்கள் வாழும் பிரதேசசபைகளான மணலாறு பிரதேசசபையுடனோ அல்லது வவுனியா தெற்கு சிங்கள பிரதேசசபையுடனோ இணைக்குமாறு முன்மொழிவை சமர்ப்பித்திருந்தேன் எனத் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .