2025 மே 17, சனிக்கிழமை

வவுனியாவில் கலந்துரையாடல்

Editorial   / 2020 பெப்ரவரி 18 , பி.ப. 04:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

வன்னி மாவட்டத்தின் வனவள திணைக்களத்தால் சுவீகரிக்கப்பட்டுள்ள பொதுமக்களின் காணிகள், வன விலங்குகளால் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத் தீர்க்கும் முகமாக ஏற்பாடு செய்யப்பட்ட கலந்துரையாடலொன்று, வனஜீவராசிகள் வளங்கள் இராஜாங்க அமைச்சர் விமலவீர திஸாநாயக்க தலைமையில், இன்று (18) நடை​பெற்றது.

இதன்போது, வனவள திணைக்களத்தால் காணிகள் விடுவிக்கப்படாமையால், பல்வேறு காணிகளுக்கான அனுமதிப் பத்திரங்களை பொதுமக்களுக்கு வழங்க முடியாமல் இருப்பதாக, பிரதேச செயலாளர்களால் இராஜாங்க அமைச்சரிடம் தெரிவிக்கப்பட்டது.

அத்துடன், இடம்பெயர்ந்து, தற்போது மீள்குடியேறியுள்ள வவுனியா வடக்கு - காஞ்சூர மோட்டை பகுதியைச் சேர்ந்த மக்களின் 400 ஏக்கர் வரையான காணிகள் வனவள திணைக்களத்தால் எல்லைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இதனால், காணிகளை அடையாளப்படுத்துவதில், அப்பகுதி மக்கள் பல்வேறு சிக்கல்களை எதிர்நோக்குவதாகவும், பொது அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன.

அவற்றை செவிமெடுத்த இராஜாங்க அமைச்சர், சம்பந்தப்பட்ட திணைக்களங்களின் அதிகாரிகளிடம் விளக்கம் கோரியதுடன், பொதுமக்களின் இவ்விடயங்களில் கவனம் செலுத்துமாறும் பணித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .