2025 மே 17, சனிக்கிழமை

வவுனியாவில் கவனயீர்ப்புப் போராட்டம்

Editorial   / 2020 பெப்ரவரி 24 , பி.ப. 03:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

வவுனியாவில், 1101 நாள்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் வவுனியா மாவட்டத்தில் இருந்து காணாமல் ஆக்கப்பட்டோரது உறவினர்களால், இன்று (24) நண்பகல் 12 மணிக்கு, கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா மாவட்டத்தில் இருந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரிய போராட்டம் ஆரம்பித்து மூன்று ஆண்டுகள் நிறைவடைவதையொட்டியே, இந்தக் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

முன்னதாக, வவுனியா கந்தசுவாமி கோவிலில், தேங்காய் அடித்து வழிபாடுகளில் ஈடுபட்ட உறவினர்கள், அங்கிருந்து, ஊர்வலமாக மணிக்கூட்டு கோபுரம் ஊடாக, தொடர் போராட்டத்தை முன்னெடுத்து வரும் பிரதான தபாலகத்தைச் சென்றடைந்து, அங்கு போராட்டத்தில் ஈடுபட்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .