2025 ஜூலை 17, வியாழக்கிழமை

வவுனியாவில் துப்பாக்கியின் மகசீன் மீட்பு

Editorial   / 2019 மே 04 , பி.ப. 12:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

வவுனியா - மடுகந்த பகுதியில் குளத்துக்கு அருகில் கைவிடப்பட்ட நிலையிலிருந்த ரி56 ரக துப்பாக்கிக்கு பயன்படுத்தும் மகசீன், தோட்டாக்கள் என்பவற்றை, இன்று காலை, மடுகந்தை விசேட அதிரடிப்படையினர் மீட்டுள்ளனர். 

இன்று காலை மடுகந்தை குளத்துக்கு அருகில், பட்டம் விடுவதற்காகச் சென்ற சிறுவன் ஒருவன், இப்பொருள்களை அங்கு அவதானித்துள்ளார். இதையடுத்து, விமானப்படையினருக்கு தகவல் வழங்கப்பட்டு மடுகந்தை பொலிஸார் சம்பவ இடத்துக்குச் சென்று பாதுகாப்பை ஏற்படுத்தியுள்ளனர்.

விசேட அதிரடிப்படையினருக்கு தகவல் வழங்கப்பட்டு சம்பவ இடத்துக்குச் சென்ற விசேட அதிரடிப்படையினர் அங்கு காணப்பட்ட ரி-56 ரக துப்பாக்கிக்கு பயன்படுத்தப்படும் மகசீன், அதற்குரிய தோட்டாக்கள் என்பவற்றை மீட்டுள்ளனர்.

அப்பகுதியில் மேலும் வெடிபொருள்களைத் தேடி தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர். எனினும் சந்தேகத்துக்கிடமான வேறு எவ்விதமான பொருள்களும் அங்கு காணப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X