2025 ஜூலை 23, புதன்கிழமை

வவுனியாவில் நாளை கவனயீர்ப்புப் போராட்டம்

Editorial   / 2017 ஓகஸ்ட் 07 , பி.ப. 05:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க அகரன் 

அரசியல் கைதிகளான நிமலரூபன், நில்ருக்சன் படுகொலை செய்யப்பட்டு, ஐந்தாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, கவனயீர்ப்புப் போராட்டமும் அஞ்சலிச் சுடர் ஏற்றல் நிகழ்வும் வவுனியாவில் நாளை (08) நடைபெறவுள்ளது.  

இது தொடர்பில், வவுனியா மாவட்ட சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பின் செயலாளர் சு.டொன்பொஸ்கோ, கருத்துத் தெரிவிக்கையில், 

“காலை 9 மணிக்கு வவுனியா, இ.போ.ச பஸ்தரிப்பு நிலையத்தின் முன்பாக இந்தக் கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெறவுள்ளது. 

“அரசாங்க பாதுகாப்பின் கீழ் இருந்த கைதிகளில் நூற்றுக்கு மேற்பட்டோர் 83 ஜூலை கலவரத்தின் பின்னர் கொல்லப்பட்டுள்ளனர். இவ்வாறான நிலை ஏற்படாதவாறு அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். சிறைச்சாலைகளில் படுகொலை செய்யப்பட்டமைக்குக் காராணமானவர்களைக் கண்டுபிடித்து, நீதித்துறை முன் நிறுத்தி உரிய தண்டனைகள் வழங்கப்பட்டிருக்க வேண்டும். அத்தோடு கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு நட்டஈடு வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இக்கொலைகளில் ஈடுப்பட்டவர்களை அரசாங்கம் கைது செய்யவும் இல்லை, உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்படவும் இல்லை, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கப்படவுமில்லை” என்றார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .