Freelancer / 2023 ஜூலை 19 , பி.ப. 11:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
வவுனியா நகரில் கண்டி வீதியில் இரண்டாம் குறுக்குத்தெரு சந்திக்கு எதிரே இருந்த லக்சனா உணவகம் புதன்கிழமை இரவு 8.20 மணியளவில் திடீரென தீ பிடித்து எரிந்துள்ளது.
குறித்த உணவகத்தில் கடமையாற்றுபவர் இதனை அவதானித்த நிலையில் வவுனியா மாநகரசபை தீயணைப்பு பிரிவினருக்கு தகவல் வழங்கியுள்ளார்.
இந்த நிலையில் அங்கு வந்த தீயணைப்பு பிரிவினர் தீயை கட்டுப்படுத்த கடும் முயற்சி செய்த போதும் உணவகம் முழுமையாக தீயில் எரிந்து நாசமாகியுள்ளது.
இருப்பினும் தொடர்ச்சியாக அமைந்துள்ள வர்த்தக நிலையங்களுக்கு தீப்பரவல் ஏற்படாத வண்ணம் கட்டுப்படுத்தப்பட்டது.
தீப்பரவலுக்கான காரணம் எரிவாயு சிலிண்டர் வெடிப்பாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.
தீ விபத்துக்கான காரணம் குறித்து வவுனியா பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். R
48 minute ago
2 hours ago
3 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
48 minute ago
2 hours ago
3 hours ago
5 hours ago