2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

வவுனியாவில் மினி சூறாவளி; ஒருவர் பலி; 47 குடும்பங்கள் பாதிப்பு

க. அகரன்   / 2020 ஏப்ரல் 09 , பி.ப. 08:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

வவுனியாவில் வீசிய மினி சூறாவளியால், 47 குடும்பங்களை சேர்ந்த 157 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் மின்னல் தாக்கத்துக்குள்ளான ஒருவர் பலியாகியுள்ளார் என்று,  அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

வவுனியாவில் கடந்த சில நாட்களாக, வெப்பமான காலநிலை நிலவி வந்திருந்த நிலையில், இரு நாட்களாக இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்து வருகின்றது.

இந்நிலையில், வவுனியா - சுந்தரபுரம், மணிபுரம், சூடுவெந்தபுலவு, நாகர் இலுப்பைக்குளம் பகுதிகளில் நேற்று முன்தினம் வீசிய மினி சூறாவளியால், 46 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன், 47 குடும்பங்களைச் சேர்ந்த 157 பேர் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

அத்தோடு ஆயிரத்துக்கு மேற்பட்ட பப்பாசி மரங்களும் அழிவடைந்துள்ளன.

இதேவேளை, வவுனியா - சுந்தரபுரம் சரஸ்வதி வித்தியாலத்தின் பிரதான கட்டடங்களும் சேதமடைந்துள்ளதுடன், வவுனியா - வைரவபுளியங்குளம் பகுதியில் மரமொன்று வீதிக்குக் குறுக்காக முறிந்து விழுந்திருந்தது.

மேலும், நேற்று முன்தினம் பெய்த மழை காரணமாக, வவுனியா நாகர் இலுப்பைக்குளத்தில் மின்னல் தாக்கத்துக்குள்ளான எஸ்.மங்களேஸ்வரன் என்ற குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .