2025 மே 19, திங்கட்கிழமை

வவுனியாவில் வழிகாட்டி பெயர்ப் பலகை அங்குரார்ப்பணம்

Editorial   / 2019 ஒக்டோபர் 21 , பி.ப. 05:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

வவுனியா மாவட்டச் செயலகத்தில் நிர்மாணிக்கப்பட்ட “விழிப்புலனற்றோரிற்கான குற்றெழுத்து வழிகாட்டி” எனும் பெயர்ப்பலகை, இன்று (21) திறந்துவைக்கபட்டது.

மாற்று வலுவுள்ளோருக்கான வலுவூட்டல் அமையத்தின் ஏற்பாட்டில், லயன்ஸ் கழகத்தின் அனுசரணையில் நடைபெற்ற இந்நிகழ்வில், வவுனியா மாவட்டச் செயலாளர் எம்.ஹனீபா, நகரசபை உறுப்பினர் ரி.கே.ராஜலிங்கம், சமூக சேவைகள் உத்தியோகத்தர் எஸ்.ஶ்ரீனிவாசன், உதவி மாவட்டச் செயலாளர் ந.கமலதாஸ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது, அங்குக் கருத்துரைத்த மாவட்டச் செயலாளர் எம்.ஹனீபா, விசேட தேவையுடையவர்களிடம் ஏதோ ஒரு திறமை நிச்சயம் மறைந்திருக்குமெனவும் இதனை நாம் கண்டுகொண்டால் அவர்கள் தமக்குப் பாரமாக இருப்பார்கள் என்ற சமூகத்தின் எண்ணத்தை அகற்ற முடியுமெனவும் கூறினார்.

அந்த விடயத்தை கண்டுபிடிப்பது மாத்திரமே தமது நடவடிக்கையாக இருக்க வேண்டுமெனத் தெரிவித்த அவர், அதன்மூலம் இந்த நாட்டுக்கும் குடும்பங்களுக்கும் பொருளாதார ரீதியான நன்மைகளைப் பெற்றுகொள்ள முடியுமெனவும், அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X