2025 ஜூலை 10, வியாழக்கிழமை

வவுனியாவில் வாள்வெட்டு

Editorial   / 2017 ஒக்டோபர் 14 , பி.ப. 01:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.என்.நிபோஜன்

வவுனியா ஒமந்தை நொச்சிமோட்டை பகுதியில் நேற்று (13) மாலை இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில், மூவர் படுகாயமடைந்து வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஒமந்தை நொச்சிமோட்டை பகுதியில் பாடசாலைக்கு அருகே காணப்படும் அபிராமி விலாஸ் உணவகத்துக்கு முன்பாக, புதிய சின்னகுளம் பகுதியைச் சேர்ந்த  இளைஞர் குழுக்களுக்கும் நொச்சி மோட்டை பகுதியைச் சேர்ந்த இளைஞர் குழுக்களுக்கிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் மோதலாக மாறி வாள்வெட்டுச் சம்பவத்தில் முடிவடைந்தது.

சம்பவம் இடத்துக்குச் சென்ற பொலிஸார் தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட காட்டுக்கத்தி, முள்ளுக்கம்பி, கத்திகள் என்பவற்றை கைப்பற்றியுள்ளதாக ஒமந்தை பொலிஸார் தெரிவித்தனர்.

இரு கிராம இளைஞர்களுக்கிடையே பல தடவைகள் மோதல் சம்பவங்கள் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .