2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

வவுனியாவில் விழிப்புணர்வுப் பேரணி

Editorial   / 2019 ஒக்டோபர் 13 , பி.ப. 02:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

 

விவசாய ஊக்குவிப்பு வாரத்தை முன்னிட்டு, “மனித ஆரோக்கியம், விவசாயம், சுற்றுசூழல், உயிர்பல்வகைமையை காக்க ஒன்றிணைவோம்” எனும் தொனிப்பொருளில், வவுனியா மாகாண பிரதி விவசாயப் பணிப்பாளர் அலுவலகம் ஏற்பாடு செய்த பாத்தீனியம் ஒழிப்பு விழிப்புணர்வுப் பேரணியும் பாத்தீனியம் ஒழிப்பு நடவடிக்கையும், நேற்று (12) முன்னெடுக்கப்பட்டன.

இதன்போது வவுனியா நகரிலிருந்து தாண்டிகுளம் விவசாயக் கல்லூரி வரை பேரணியாக சென்றவர்கள், ஏ9 வீதியின் இருமருங்கிலும் உள்ள பாத்தீனியச் செடிகளை அகற்றினர்.

தொடர்ந்து, விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .