Freelancer / 2023 ஏப்ரல் 16 , பி.ப. 03:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
வவுனியா, வேப்பங்குளம், பகுதியில் உள்ள வீடு ஒன்றிற்குள் புகுந்து மாணவன் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட நிலையில், காயமடைந்த மாணவன் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்று (15) மாலை இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியாவில் இருவேறு பிரபல பாடசாலை மாணவர்கள் இருவருக்கு இடையில் கடந்த சில நாட்களாக வாய்தர்க்கம் ஏற்பட்டு முரண்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் இரு மாணவர்களுக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்ட நிலையில் மாணவன் ஒருவரின் பெற்றோர் தலையிட்டு சமரசப்படுத்தி அனுப்பி வைத்துள்ளனர்.
இதன்பின் நேற்று ( 15) மாலை வவுனியா, வேப்பங்குளம், 60 ஏக்கர் பகுதியில் உள்ள மாணவனின் வீட்டுக்குள் புகுந்த மற்றைய மாணவன் உள்ளிட்டோர் குறித்த வீட்டில் வசித்த மாணவன் மீது தாக்குதல் நடத்திவிட்டு அங்கிருந்து சென்றுள்ளனர்.
இதனால் காயமடைந்த 16 வயது மாணவன் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இதேவேளை, குறித்த இரு பகுதியினரும் 16 தொடக்கம் 17 வயதான மாணவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. R
04 Nov 2025
04 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
04 Nov 2025
04 Nov 2025