Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 16, வெள்ளிக்கிழமை
Editorial / 2020 ஜூலை 14 , பி.ப. 05:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சண்முகம் தவசீலன்
நாட்டில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற பொதுத் தேர்தலுக்கான வாக்கெடுப்புகள் ஓகஸ்ட் மாதம் 5ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில், நேற்று முதல் தபால் மூல வாக்களிப்பு இடம்பெற்று வருகின்றது
அந்த வகையிலேயே நேற்றைய தினம், சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்களைச் சேர்ந்த ஊழியர்களுக்கான தபால் மூல வாக்களிப்புக்கான சந்தர்ப்பங்கள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. அந்த வகையிலே, முல்லைத்தீவு மாவட்டத்திலும் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தைச் சேர்ந்த ஊழியர்கள் தபால் மூல வாக்களிப்புகளை மேற்கொண்டிருந்தனர்.
இன்றைய தினம் (14) முப்படைகள், பொலிஸார், மாவட்டச் செயலகம், தேர்தல் அலுவலகம், சிவில் பாதுகாப்புத் திணைக்களம், சுகாதாரப் பிரிவு என்பன தவிர்ந்த ஏனைய அரச திணைக்களங்கள் யாவற்றிலும், தபால் மூல வாக்களிப்புகள் இடம்பெற்று வருகின்றது.
அந்தவகையில், முல்லைத்தீவு வலயக் கல்வி அலுவலக வாக்கு சாவடிக்கு அருகில் வலயக்கல்வி அலுவலகத்தின் ஊழியர் ஒருவர் தனது மோட்டார் சைக்கிளில் வேட்பாளர் ஒருவரின் புகைப்படம் மற்றும் சின்னத்துடன் கூடிய ஸ்ரிக்கர் ஒட்டியவாறு மோட்டார் சைக்கிளினை நிறுத்தி வைத்திருந்த நிலையில், முல்லைத்தீவு மாவட்ட உதவி தேர்தல்கள் ஆணையாளர் உள்ளிட்ட அதிகாரிகள் சென்று அந்த விளம்பரத்தை அகற்றி, மோட்டார் சைக்கிளை அங்கிருந்து அகற்றினர்.
அத்தோடு குறித்த வாக்களிப்பு நிலையத்துக்கு முன்பாக கட்சி ஒன்றின் சின்னத்துடன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனம் ஒன்றும் சோதனையிடப்பட்டு வாகனமும் அந்த இடத்தை விட்டு அகற்றப்பட்டிருந்தது. அத்தோடு, அந்தப் பகுதியில் சின்னம் பொறிக்கப்படட காட் வீசப்பட்டிருந்த நிலையில், அவையும் அகற்றி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வாக்களிப்பு சுமூகமாக இடம்பெற்றுவருகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago
8 hours ago