Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
சண்முகம் தவசீலன் / 2018 ஜனவரி 25 , பி.ப. 04:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட தேராவில் பகுதியில் ஒருதொகுதி வாக்காளர் அட்டைகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் இருவர் இன்று (25) கைது செய்யப்பட்டுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்தனர்.
நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்ற தேர்தலில் வாக்களிக்கவுள்ள வாக்காளர்களுக்கு விநியோகிக்கவேண்டிய ஒருதொகுதி வாக்குச்சீட்டுக்களே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளன.
குறித்த பகுதி தபால் ஊழியர், கிராமவாசி ஒருவரிடம் கடிதங்களை வழங்கியே மக்களுக்கு விநியோகிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார்.
இதேபோன்று; குறித்த பகுதிக்கான வாக்காளர் அட்டைகளையும் தபால் ஊழியர், கிராமவாசியிடம் கொடுத்து மக்களுக்கு வழங்குமாறு கூறியுள்ளார்.
இவ்வாறு வாக்காளர் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் 288 வாக்காளர் அட்டைகள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளதுடன், தபால் ஊழியரையும், கிராமவாசியையும் கைது செய்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
38 minute ago
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
2 hours ago
4 hours ago