Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
நடராசா கிருஸ்ணகுமார் / 2018 ஜனவரி 22 , பி.ப. 05:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
“வயல் காணியைப் பெற்றுக் கொடுக்க முடியாதவர்கள் வாக்கு கேட்டு வீடுகளுக்கு வருவது தவிர்க்கப்பட வேண்டும்” என, ஆனைவிழுந்தான்குளம் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில், அவர்கள் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
“தென்னிலங்கையில், 1983ஆம் ஆண்டு ஏற்பட்ட வன்செயல்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கென உருவாக்கப்பட்ட ஆனைவிழுந்தான் கிராமத்தில், நெற்செய்கைக்கென ஒதுக்கப்பட்ட வயல் காணிகள் பகிர்ந்தளிக்கப்படாமல் உள்ளன.
“இந்த வயல் நிலத்தைப் பெற்றுத் தருமாறு மக்களாகிய நாம் எல்லோரிடமும் சென்றோம். கடந்த ஆட்சியின்போது, வயல் நிலம் பெற்றுத்தர முடியாது. எமக்கு வாக்களியுங்கள் என வாக்குறுதிகள் வழங்கியதன் அடிப்படையில், வாக்குகளை அளித்தோம். நல்லாட்சி உருவாக்கப்பட்டது.
“ஆனால் தற்போதுள்ள ஆட்சியாளர்களிடம் இருந்து கூட, எமக்கான வயல் நிலத்தைப் பகிர்ந்தளிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை. எமது கிராமத்துக்கு வருகைத் தந்த அரசியல்வாதிகள் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியபோதிலும் அவை நிறைவேற்றப்படாமலே உள்ளன. இந்நிலையில், வயல் நிலம் பெற்றுத் தராமல் எம்மை ஏமாற்றிய அரசியல்வாதிகளுக்கு உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் தகுந்த பாடம் படிப்பிப்போம்” எனவும் தெரிவித்தனர்.
2 hours ago
2 hours ago
2 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago
5 hours ago