Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2017 ஓகஸ்ட் 23 , பி.ப. 05:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.என்.நிபோஜன், சுப்பிரமணியம் பாஸ்கரன்
“பல்கலைக்கழக மாணவன் கஜனின் குடும்பத்தாருக்கு எவ்வித உதவிகளும் வழங்கப்படவில்லை” என, அவரது தாயார், இன்று (23) தெரிவித்துள்ளார்.
கடந்த வருடம், யாழ். - கொக்குவில் பகுதியில் பல்கலைக்கழக மாணவர் மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில், பல்லைக்கழக மாணவர்கள் இருவர் உயிரிழந்திருந்தனர்.
அவர்களில் கிளிநொச்சி பகுதியைச் சேர்ந்த, நடராசா கஜன் என்ற மாணவனின் குடும்பத்தாருக்கு இழப்பீடுகள் வழங்கப்படும் என மீள்குடியேற்ற அமைச்சர் சுவாமிநாதன் வாக்குறுதி வழங்கியிருந்தார்.
எனினும், குறித்த வாக்குறுதியில் எவையும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை என, கஜனின் தாயார் தெரிவித்தார்.
கிளிநொச்சி - பாரதிபுரம் பகுதியைச் சேர்ந்த கஜனின் குடும்பத்தினருக்கு வீடு அமைத்து கொடுப்பதாகவும், கல்வி கற்று வீட்டில் உள்ள ஒருவருக்கு அரச வேலை வாய்ப்பு வழங்குவதாகவும் தெரிவித்திருந்த போதிலும், இதுவரை எதுவும் கிடைக்கவில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.
வீட்டுத்திட்டம் மூலம் வீடு ஒன்றை பெறுவதற்கு தான் பல்வேறு முயற்சிகள் எடுத்ததாகவும், அதன் மூலம் வீட்டுத்திட்டம் ஒன்று கிடைத்துள்ள போதிலும், வீட்டை கட்டி முடிக்க முடியாது போயுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தனக்கு எவ்வித உதவியும் கிடைக்காவிட்டாலும் பறவாயில்லை. எனது பிள்ளையின் மரணத்துக்கு நீதி வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
42 minute ago
20 Jul 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
20 Jul 2025