2025 மே 09, வெள்ளிக்கிழமை

’வாக்கெடுப்பு:செய்தியொன்றை கூறுகிறது’

Niroshini   / 2021 ஜூலை 21 , பி.ப. 07:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

 

ராஜபக்ஷ குடும்ப ஆட்சி இன்றும் பலமாக இருப்பதான செய்தியை நேற்று (20) வாக்கெடுப்பு கூறுகின்றது என, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

 

கிளிநொச்சி ஊடக மையத்தில, இன்று (21) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர், இதனை தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர், பெற்றோல் விலை உயர்வுக்கு அமைச்சரே பொறுப்பு என்ற வகையில்தான் இந்த நம்பிக்கையில்லா பிரேரணை வந்தது எனவும் அது வெறுமனே அவர்தான் பொறுப்பு கூற வேண்டும் என்றால், அது நிச்சயமாக இல்லை எனவும் அதற்கு அரசாங்கமும் பொறுப்பு கூற வேண்டும் எனவும் தெரிவித்தார்.

'ஆனாலும் எதிர்த்தரப்பிலே இருந்தவர்கள் முழுமையாக ஆதரவை முழுமையாக தெரிவித்திருந்தால், அரசாங்கம் அந்த எதிர்ப்பை பார்த்திருக்கும். ஆனால் இப்பொழுது அவர்களுக்கு இருந்த வாக்குகளைவிட அதாவது நான் அறிந்தவகையில் 149 வாக்குகள் ஆளும் கட்சி தரப்பில் இருக்கக்கூடியது. ஆனால் நான் அறிந்த வகையில் 152 வாக்குகளை பெற்றிருக்கின்றார்கள். அவ்வாறாக இருந்தால் எதிர்த்தரப்பில் இருந்த சிலரும் அவர்களுக்கு சார்பாக வாக்களித்திருக்கின்றார்கள் என்றே கருத வேண்டும்'' என்றார்

இப்பொழுது ராஜபக்ஷ குடும்ப ஆட்சி தொடர்பில் இந்த வாக்கெடுப்பு ஒரு செய்தியை சொல்லியிருக்கின்றது. அதாவது, ராஜபக்ஷ குடும்ப ஆட்சி என்பது இன்னும் பலமாகவும், அசைக்க முடியாதவாறும் இருக்கின்றது என்ற செய்தியை காட்டி நிற்கின்றது எனவும், சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X