Freelancer / 2024 ஜனவரி 06 , மு.ப. 11:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
செ.கீதாஞ்சன்
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட மாணிக்கபுரம் பகுதியில் நேற்று வாள் மற்றும் போதைப்பொருட்களுடன் சந்தேகநபர் ஒருவரை புதுக்குடியிருப்பு பொலிஸார் கைது செய்துள்ளார்கள்.
குறித்த நபரை சந்தேகத்தின் பெயரில் கைது செய்யதவேளை அவரிடம் இருந்து இரண்டு வாள்கள் மற்றும் கஞ்சா, ஐஸ் போதைப்பொருட்கள் என்பன மீட்கப்பட்டுள்ளன.
மாணிக்கபுரம் பகுதியினை சேர்ந்த 29 வயதுடைய நபரே கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவரிடம் இருந்து பொதி செய்யப்பட்ட கஞ்சா பொதிகள் நான்கும், ஐஸ் போதைப்பொருள் 600 மில்லிக்கிராம் என்பனவும் மீட்கப்பட்டுள்ள.
சந்தேக நபரையும் சான்று பொருட்களையும் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கையில் புதுக்குடியிருப்பு பொலிஸார் ஈடுபட்டுள்ளார்கள். R
1 hours ago
23 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
23 Dec 2025