சுப்பிரமணியம் பாஸ்கரன் / 2018 மார்ச் 15 , பி.ப. 04:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
“கிளிநொச்சி பரந்தன் பகுதியில் பயனாளி ஒருவருக்கு கடந்த வாரம் வாழ்வாதாரத்துக்காக வழங்கப்பட்ட கால்நடை தொடர்பில், முறைகேடு இடம்பெற்றுள்ளதாக வெளியாகிய செய்திகள் தொடர்பிலான உண்மைத்தன்மை பற்றி ஆராய்ந்து வருவதாக” மாவட்ட செயலர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி கண்டாவளைப்பிரதேச செயலர் பிரிவின் கீழ் உள்ள பரந்தன் கிராம அலுவலர் பிரிவில் வசித்து வரும் பெண்தலைமைத்துவக்குடும்;பம் ஒன்றுக்கு மீள்குடியேற்ற அமைச்சினூடாக வழங்கப்பட்ட ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான வாழ்வாதார உதவித்திட்டத்தில் மோசடி இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் மாவட்ட செயலரிடம் தொடர்புகொண்டு கேட்டபோது, ‘சம்பந்தப்பட்ட உத்தியோகத்தரை அழைத்து விளக்கம் கேட்கப்பட்டுள்ளதுடன், இதன் உண்மைத்தன்மை தொடர்பில் ஆராய்ந்து வருவதாக ‘தெரிவித்துள்ளார்.
31 minute ago
1 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
1 hours ago
6 hours ago