2025 மே 10, சனிக்கிழமை

‘விசாரணை முன்னெடுக்கப்படும்’

Editorial   / 2018 ஜூன் 18 , பி.ப. 05:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

 

கிளிநொச்சி – பன்னங்கண்டிப் பகுதியில் உள்ள சமுர்த்தி பயனாளிகளிடமிருந்து, பற்றுச்சீட்டுகள் எதுவுமின்றி பணம் அறவிடப்பட்ட சம்பவம் தொடர்பில், விசாரணை முன்னெடுக்கப்படுமென, மாவட்ட சமுர்த்தி ஆணையாளர் தெரிவித்தார்.

பன்னங்கண்டி கிராம அலுவலர் பிரிவில் வசிக்கும் சமுர்த்தி பயனாளிகளுக்கான கொடுப்பனவுகள், வட்டக்கச்சியில் அமைந்துள்ள சமுர்த்தி வங்கியூடாகவே வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், வியாழக்கிழமை (14) பயனாளிகளுக்கான கொடுப்பனவுகள் வழங்கப்பட்டபோது, வங்கியில் வைத்தே பயனாளிகளிடம் இருந்து 300 ரூபாய் முதல் 1,000 ரூபாய் வரை பணம் பெறப்பட்டதாகவும் அற்கான பற்றுச்சீட்டுகள் எதுவும் வழங்கப்படவில்லை எனவும் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் மாவட்ட சமுர்த்தி ஆணையாளரிடம் வினவியபோதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X