Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 செப்டெம்பர் 19 , பி.ப. 04:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.என்.நிபோஜன், மு.தமிழ்ச்செல்வன்
கிளிநொச்சியில் சிதைக்கப்பட்டதாக தென்னிலங்கையில் பரப்பட்ட தொல்பியல் சின்னங்கள் தொடர்பில், நேற்று (18) விசேட தொல்லியல் குழு ஆய்வில் ஈடுபட்டது
நேற்று பகல் கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்ட குழுவினர், சிதைக்கப்பட்டதாக கூறப்படும் தொல்பியல் சின்னங்கள் தொடர்பில் ஆய்வு செய்தனர்.
வவுனியா தொல்லியல் திணைக்கள உயரதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் குறித்த பகுதியில் ஆய்வு நடவடிக்கையில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 16.09.2018 அன்று கிளிநொச்சி டிப்போ சந்தியில் அமைக்கப்பட்டிருந்த சிறு வீதி வளைவு உடைக்கப்பட்டமை தொடர்பில் தென்னிலங்கையில் தொல்பியல் மரபு சின்னங்கள் உடைக்கப்பட்டுள்ளதாக பொய்யான செய்திகள் பரப்பப்பட்டன.
குறித்த பகுதியில் 2010ஆம் ஆண்டளவில் குறித்த பகுதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட சமாதானத்திற்கான நினைவு தூபியின் மேலதிக அழகுபடுத்தலுக்காக புராதன கற்றகள் போன்று வடிவமைக்கப்பட்ட கற்களால் வீதி சிறு வளைகு நான்கு பக்கங்களிலும் அமைக்கப்பட்டது.
குறித்த வளைவுகளில் நகர திட்டமிடல் அதிகார சபையினால் பூங்கா அமைப்பதற்காக ஒரு பகுதியிலும், மற்றய பகுதியில் கிளிநாச்சி பொது சந்தை அமைப்பதற்காகவும் ஏற்கெனவே அகற்றப்பட்டிருந்த நிலையில், கடந்த 16ஆம் திகதி மற்றய பகுதியில் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுவந்த பகுதியில் வடிகாண் ஒன்றை அமைப்பதற்கு அகற்றப்பட்டது.
இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் உண்மைநிலையை ஆராய குறித்த பகுதிக்கு விசேட குழு வருகை தந்திருந்தது. அவ்விடத்தில் குறிப்பிட்ட தொல்பொருள் சிதைக்கப்பட்டதாக கூறப்படும் உண்மை நிலையை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க உள்ளதாக, அவர்கள் இதன்போது குறிப்பிட்டனர்.
15 minute ago
34 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
34 minute ago
1 hours ago
2 hours ago