Mayu / 2024 ஜனவரி 30 , பி.ப. 02:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள விடத்தல் தீவு கடற்கரையில், தடை செய்யப்பட்ட இழுவை மடியை பயன்படுத்தி கடற்றொழிலில் ஈடுபட்ட 5 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதோடு அவர்கள் பயன்படுத்திய இழுவை படகும் மீட்கப்பட்டுள்ளது.

கைதானவர்கள் விடத்தல் தீவு மக்கள் மற்றும் கடற்றொழில் திணைக்கள உத்தியோகத்தர்களால் திங்கட்கிழமை (29) இரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கமைய, கைது செய்யப்பட்டவர்கள் எருக்கலம்பிட்டி மற்றும் உப்புக்குளம் பகுதியை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் விடத்தல் தீவு இறங்கு துறையில் இழுவை படகு நிறுத்தப்பட்டுள்ளதோடு, மேலதிக நடவடிக்கைக்காக 5 மீனவர்கள் மன்னார் கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
லெம்பர்ட் ரொசேரியன்



6 hours ago
8 hours ago
30 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
8 hours ago
30 Oct 2025