Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 ஜனவரி 29 , மு.ப. 09:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
- க.அகரன்
“பொய்ப் பிரசாரம் செய்பவர்கள், எமது விடுதலைக்கு உதவாத கபட நோக்கம் கொண்ட பிரசாரவாதிகள்” என தமிழரசுகட்சியின் தலைவரும் யாழ்மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமாகிய மாவை.சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
உள்ளுராட்சி மன்றதேர்தலுக்கான தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் வவுனியாவில் அமைந்துள்ள தமிழரசுக்கட்சி அலுவலகத்தில் நேற்று (28) வெளியிடப்பட்டது.
இந்நிகழ்வில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு அரசாங்கத்தால் 2 கோடிகள் இலஞ்சம் வழங்கப்பட்டதாக கூறுவது ஒரு பொய்யான கதையே.
எங்களுடைய வரலாற்றிலேயே இவ்வாறான சந்தேகம் ஒருபோதும் எழுந்தது கிடையாது. வரவு செலவுதிட்டத்தை பலமுறை நாம் ஆதரித்துள்ளோம். பலமுறை நாம் எதிர்த்துள்ளோம். முக்கியமாக அரசாங்கத்துக்கு மக்கள் தந்த ஆணைப்படி, எங்களுடைய தேர்தல் அறிக்கையிலே ஒரு பக்கம் அரசியல் தீர்வு காண்பதற்காக முயற்சி எடுக்கப்படல்வேண்டும். அடுத்து போரினால் பாதிக்கப்பட்ட மக்களையும் தேசத்தையும் கட்டியெழுப்பவேண்டும் என்ற தீர்மானத்தின்படி நாங்கள் செயற்பட்டுக்கொண்டிருக்கின்றோம்.
இதற்காக ஆட்சி மாற்றத்துக்கு பின்பு ஜனாதிபதியிடமும் பிரதமரிடமும் அவர்கள் எமது பிரதேசத்திற்கு வந்து நடாத்திய கூட்டங்களிலும் நாங்கள் வேண்டுகோள் விடுத்துள்ளோம். அதனைவிட மிக அண்மைக்காலத்தில் நிதி அமைச்சிடம் அவர்களின் அழைப்பின் பெயரில் நாங்கள் பேச்சுவார்த்தை நடாத்தியிருக்கின்றோம்.
வரவு செலவு திட்டம் முன்னர் எப்பொழுதும் இல்லாததைவிட உயர்தர திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான பொய்களை பரப்புவோர், தம்முடைய பிரதேசத்துக்கு ஒரு அறிக்கையைகூட முன்வைக்காதவர்கள். ஒரு வேண்டுகோளை முன்வைக்காதவர்கள்.
இந்த இரண்டு கோடி ரூபாய்க்காக அரசாங்கத்திடம் ஆவணங்கள் பெறப்பட்டுள்ளது. நாங்கள் பிரதமரிடமும் ஜனாதிபதியிடமும் பல திட்டங்களை முன்வைத்துள்ளோம்.
இவ்வாறான பொய்களை கூறுவோர், எமது இனத்தின் விடுதலைக்கோ எமது தேசத்தை கட்டியெழுப்புவதற்கோ பொருத்தமில்லாத, உதவாத அரசியலில் மிகவும் கபடம் வாய்ந்த உள்நோக்கமான பொய் பிரச்சாரவாதிகள்” என தெரிவித்தார்.
22 minute ago
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
2 hours ago
4 hours ago