2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

விதிமுறைகளை மீறிய உணவகங்களுக்கு பூட்டு

Niroshini   / 2022 ஜனவரி 09 , பி.ப. 08:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ.கீதாஞ்சன்  

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் அமைந்துள்ள முதன்மை  உணவகங்கள் பல, பொதுசுகாதார பிரிவின் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டின் கீழ், நீதிமன்ற உத்தரவுக்கு அமைய பூட்டப்பட்டுள்ளன.  

புதுக்குடியிருப்பு நகர் பகுதியில், அதிகளவான மக்கள் தங்கள் அன்றாட உணவுகளை பெற்றுக்கொள்ளும் முதன்மை உணவகம் உள்ளிட்ட பல பிரசித்தி பெற்ற 4 உணவகங்களே, இவ்வாறு பூட்டப்பட்டுள்ளன.

 7ஆம் திகதியன்று, குறித்த உணவகங்கள் மீது புதுக்குடியிருப்பு பொது சுகாதார பரிசோதகர்களால் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.  

சுகாதார விதிமுறைகளில் கீழ் உணவகங்கள் இயங்காத காரணம், அனுமதி இல்லாத நிலை, சுகாதார பரிசோதகர்களால் அறிவிக்கப்பட்ட சுகாதார விதிமுறைகளை செய்யாத காரணம் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு, குறித்த உணவகங்கள் மீது வழக்கு தொடரப்பட்டது.  

இதையடுத்து, உணவக உரிமையாளர்கள் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில், 7ஆம் திகதியன்று முன்னிலைப்படுத்தப்பட்டனர்.  இதன்போது உணவகங்கள் மீது அபராதம் விதிக்கப்பட்டதுடன், உணவகங்களில் சீர்செய்யப்பட வேண்டிய   வேலை அனைத்தையும் செய்து முடித்து, பொதுசுகாதார பரிசோதகர்கள்  அனுமதி கொடுத்தால் கடையை திறக்கலாம் என்றும் அதுவரை கடைகளை பூட்டுமாறும் மன்று பணித்துள்ளது.  

இந்த சம்பவத்தின் பின்னர், அன்றாடம் உணவகங்களில் உணவை பெறுபவர்கள் புதுக்குடியிருப்பு நகர்பகுதியில் உணவை பெற்றுக்கொள்வதில் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .