Editorial / 2018 ஒக்டோபர் 03 , பி.ப. 12:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராசா கிருஸ்ணகுமார்
கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள கமநல சேவை நிலையங்கள் ஊடாக மானிய விலையிலாவது விதை நெல் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்த விவசாயிகள், தற்போது ஏமாற்றம் அடைந்து உள்ளனர்.
கடந்த இரு ஆண்டுகளாக கிளிநொச்சி மாவட்டத்தில் வரட்சியான சூழல் காரணமாக நெற்செய்கை வெற்றியளிக்கவில்லை.
இந்நிலையில், இவ்வாண்டு காலபோகத்திற்குரிய விதை நெல்லுக்கான பதிவுகள் கமநல சேவை நிலையங்களால் மேற்கொள்ளப்பட்ட நிலையில், தற்போது காலபோக நெற்செய்கை தொடங்கி உள்ள நிலையில், கமநல சேவை நிலையங்கள் ஊடாக விதை நெல் கிடைக்கும் என்று நம்பியிருந்த விவசாயிகள் தற்போது ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
கிளிநொச்சி மாவட்டத்திலே விதை நெல்லுக்கான நெருக்கடி காணப்படுவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
10 minute ago
14 minute ago
53 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
14 minute ago
53 minute ago