2025 மே 19, திங்கட்கிழமை

விதைப்பு பணிகள் 85% நிறைவு

Editorial   / 2019 ஒக்டோபர் 21 , பி.ப. 05:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி மாவட்டத்தில், இவ்வாண்டுக்கான காலபோக பயிர்ச்செய்கையின் 85 சதவீதமான விதைப்பு பணிகள் நிறைவடைந்துள்ளதாக, விவசாயத் திணைக்களத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இரணைமடுக்குளம் உள்ளிட்ட குளங்கள், சிறிய குளங்களின் கீழான நிலப்பரப்புகள் மானாவாரிப்பயிர்ச் செய்கை நிலங்கள் உள்ளடங்கலாக வருடாந்தம் 59 ஆயிரம் நிலப்பரப்பில் காலபோக செய்கை முன்னெடுக்கப்படுகின்றது.

இவ்வாண்டும், இவ்வாறு காலபோகசெய்கை முன்னெடுக்கப்படுகின்றது.

தற்போது, இரணைமடுக்குளத்தின் கீழான 21 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பிலும் ஏனைய குளங்களின் கீழான நிலப்பரப்பிலும் காலபோக விதைப்புகள் நிறைவடையும் தறுவாயில் உள்ளன.

இதேவேளை மாவட்டததின் முழுமையான காலபோக விதைப்புகளின்படி, 85 சதவீதமான விதைப்பு பணிகள் நிறைவு பெற்றுள்ளதாகவும், விவசாயத் திணைக்களத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X