2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

விதைப்புக் காலம் 25இல் நிறைவடைகிறது

Editorial   / 2019 ஒக்டோபர் 13 , பி.ப. 02:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ.கீதாஞ்சன்

முல்லைத்தீவு - உடையார்க்கட்டுக்குளத்தின் கீழான விவசாயிகளுக்கான பெரும் போக நெற்செய்கைக்கான விதைப்புக் காலம், ஒக்டோபர் 25ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது.

மாத ஆரம்பத்தில் நடைபெற்ற பெரும்போக நெற்செய்கைக்கானக் கூட்டத்தின் போது, ஒக்டோபர் 5ஆம் திகதி முதல் ஒக்டோபர் 25ஆம் திகதி வரையான காலப்பகுதியை விதைப்பு காலப்பகுதியாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், தற்போது வரை, 2,500 ஏக்கருக்கு மேல் உடையார்கட்டு குளத்தின் கீழான பெரும்போக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, விவசாயிகளுக்கான உரம், நாளை (14) முதல் கட்டம் கட்டமாக வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .