Niroshini / 2021 ஜூலை 04 , மு.ப. 10:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராசா கிருஸ்ணகுமார்
முல்லைத்தீவு - திருமுறிகண்டி, அக்கராயன் வீதியில், நேற்று (03) இரவு இடம்பெற்ற விபத்தில், சகோதர்கள் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
18, 11 வயதுகளையுடைய சிறுவர்கள் இருவரே, இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளனர்.
6ஆம் கடடைப் பகுதியில், வீதி புனரமைப்பு பணியில் ஈடுபடும் தமது தந்தைந்தைக்கு, குறித்த இருவரும், அக்கராயன் - கெங்காதரன் குடியிருப்பில் இருந்து மோட்டார் சைக்கிளில் உணவு எடுத்துச் சென்றுள்ளனர்.
இதன்போது, 5ஆம் கட்டைப் பகுதியில் வைத்து, வீதி புனரமைப்புக்காக குவிக்கப்பட்டிருந்த சல்லிக் குவியலில் மோட்டார் சைக்கிள் மோதுண்டு விபத்துக்குள்ளானது.
இதில் படுகாயடைந்த 18 வயது இளைஞர் கிளிநொச்சி பொது வைத்தியசாலையிலும் அவரின் சகோதரரான 11 வயது சிறுவன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago