2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

விபத்தில் இருவர் காயம்

Niroshini   / 2021 ஜனவரி 05 , பி.ப. 07:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.என்.நிபோஜன், சுப்பிரமணியம் பாஸ்கரன்

பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இயக்கச்சி பகுதியில், இன்று (05) காலை 8 மணியளவில் இடம்பெற்ற விபத்தில், இருவர் காயமடைந்துள்ளனர்.

முல்லைத்தீவில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்று, எதிரே பயணித்த வாகனத்தை முந்திச்செல்ல முற்பட்ட போது, சாவகச்சேரியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த கென்ரர் வாகனத்துடன் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதன்போது, வாகனங்களை செலுத்திய சாரதிகள் இருவரும் காயமடைந்த நிலையில், பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .