Editorial / 2020 ஜூலை 28 , பி.ப. 01:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க. அகரன்
வவுனியா - பறண்நட்டகல் பகுதியில், இன்றையதினம் (28) காலை இடம்பெற்ற விபத்தில், ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வவுனியாவில் இருந்து ஓமந்தை நோக்கி சென்றுகொண்டிருந்த மோட்டார் சைக்கிளும் ஓமந்தையில் இருந்து வவுனியா நோக்கி வந்துகொண்டிருந்த டிப்பர் வாகனமும் மோதுண்டே, இவ்விபத்து சம்பவித்துள்ளது.
இதன்போது, விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் படுகாயமடைந்த நிலையில் நோயாளர்காவு வண்டிமூலம் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
விபத்தினால் கட்டுப்பாட்டை இழந்த டிப்பர் வாகனம் குடைசாய்ந்துள்ளதுடன், அதன் சாரதி சிறுகாயங்களுக்கு உள்ளாகினார்.
சம்பவம் தொடர்பாக, ஓமந்தை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
2 hours ago
9 hours ago
24 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
9 hours ago
24 Mar 2026