2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

விபத்தில் நால்வர் படுகாயம்

Editorial   / 2019 மே 03 , மு.ப. 11:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.என்.நிபோஜன், சுப்ரமணியம் பாஸ்கரன்

பளையிலிருந்து முறிகண்டி நோக்கிப் பயணித்த டிப்பர் ரக வாகனமொன்று, ஏ9 வீதி, கிளிநொச்சி நகர், நீதிமன்றத்துக்கு அருகில், மரமொன்றில் மோதி  விபத்துக்குள்ளானதில், படுகாயமடைந்த நால்வர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

டிப்பர் ரக வாகனத்தில் பயணித்த ஐவரில் நால்வர் காயமடைந்துள்ளனர் என்றுத் தெரிவித்த பொலிஸார், இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த மரத்துடன் மோதுண்டு மேலும் இரு வாகனங்கள், அண்மையில் விபத்துக்குள்ளாகின. இந்நிலையில் மரமானது முறிந்து விழும் தருவாயில் உள்ளதென்றும் அதனை அகற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறும், பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .