2025 மே 09, வெள்ளிக்கிழமை

விபத்தில் வான் சேதம்

Niroshini   / 2021 ஜூலை 12 , மு.ப. 11:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன், சண்முகம் தவசீலன்

முல்லைத்தீவு - மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முறிகண்டி பகுதியில், நேற்று (11) நள்ளிரவு இடம்பெற்ற விபத்தில், வான் ஒன்று சேதமடைந்துள்ளது.

இவ்விபத்தால், ஏ9 வீதியூடான போக்குவரத்து சில மணிநேரம் தடைப்பட்டிருந்தது.

அத்துடன், இவ்விபத்தில், யாருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை.

தென்னிலங்கையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த வான் ஒன்று, வழிப்பாட்டுக்காக, முறிகண்டி பிள்ளையார் கோவிலுக்கு முன்பாக நிறுத்தப்பட்டது.

இதன் போது, வானின் சாரதி கோவிலுக்குச் சென்றிருந்த நிலையில், வாகனத்தில் சிலர் இருந்துள்ளனர். இந்த நிலையில், ஏ9 வீதியில் பயணித்து பாலம் கட்டுமானப் பணிக்காக கொங்ரீட்  தூண் ஏற்றி சென்ற கனரக வாகனம் ஒன்று, அந்த வானுடன் மோதியுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X