Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 ஜனவரி 03 , பி.ப. 01:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செல்வநாயகம் கபிலன்
அதிவேகமாக செல்லும் அரச திணைக்கள வாகனங்களால், யாழ். மாவட்டத்திலும் சரி, பிற மாவட்டங்களிலும் விபத்துகள் அதிகளவு இடம்பெறுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அளவுக்கு அதிகமாக செல்லும் வாகனங்களால், அதிகளவு விபத்துகளால் ஏற்பட்ட மரணங்கள், கடந்த காலங்களில் பதிவாகியுள்ளதாக, பொலிஸ் திணைக்கள தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன. குறிப்பாக, யாழ்ப்பாணத்தில் இருந்து பருத்தித்துறை மார்க்கமாகச் செல்லும் வாகனங்கள் மற்றும் ஏ9 நெடுஞ்சாலை மார்க்கமாகச் செல்லும் வாகனங்கள் அதேபோல், பண்ணை ஊர்காவற்றுறை பகுதியூடாகப் பயணிக்கும் திணைக்கள வாகனங்கள் அதிகவேகத்தால் தனது கட்டுப்பாட்டை இழந்து, எதிரே வரும் வாகனங்களுடன் மோதுவது மட்டுமல்லாமல், பயணிக்கும் பகுதிகளில் உள்ள கடல்நீரேரிகளுக்குள்ளும் பாய்ந்து விபத்துகளை ஏற்படுகின்றன.
கடந்த வருடம் அச்சுவேலி-வல்லை பகுதியில் உள்ள கடல் நீரோரியில் இராணுவத்தின் வாகனங்கள் நான்கு உட்பட அரச திணைக்கள வாகனங்கள் இரண்டு கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியிருந்தன. அதேபோல கொடிகாமம், சாவகச்சேரி பொலிஸ் பிரதேச பகுதிகளில், கடந்த வருடம் இடம்பெற்ற வீதி விபத்துகளில் அதிகளவானவை அரச திணைக்கள வாகனங்கள் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.
காலை,மாலை நேரங்களில் கடமைக்குச் செல்லும் அரச திணைக்கள அதிகாரிகளின் வாகன சாரதிகள் மின்னல் வேகத்தில் செல்வதை அவதானிக்கக்கூடிய நிலை தற்போது உள்ளது. இவ்வாறு வாகனங்களை செலுத்தும் அரச திணைக்கள வாகன சாரதிகளை கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
போக்குவரத்து விதிமுறையை மீறும் சாரதிகள் யார் என்றாலும் தகுதி, தராதரம் பார்த்து கைதுசெய்வதன் மூலம் யாழ்ப்பாணதில் இடம்பெறும் வீதி விபத்துகளை கட்டுப்படுத்த முடியும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
4 minute ago
4 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
4 hours ago
5 hours ago
5 hours ago