2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

‘விமல் அங்கொடையில் இருக்க வேண்டியவர்’

Editorial   / 2020 பெப்ரவரி 10 , பி.ப. 04:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ.கீதாஞ்சன், சண்முகம் தவசீலன்

அமைச்சர் விமல் வீரவன்ச அங்கொடையில் இருக்க​ வேண்டியவரென, வடக்கு மாகாணசபையின் முன்னாள்  உறுப்பினர் து.ரவிகரன் தெரிவித்தார்.

வடக்கு மாகாணசபையின் முன்னாள்  உறுப்பினர் து.ரவிகரனின் அலுவலகத்தில், நேற்று (09) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர், காணாமல் ஆக்கப்பட்டோர் குறித்து விமல் வீரவன்ச கூறிய கருத்தை, இலங்கை வாழ் மக்கள் அனைவரும் அவதானிக்க வேண்டுமெனவும்,  இவரை அங்கொடை வைத்தியசாலைக்கு அனுப்பவேண்டுமெனவும் கூறினார்.

அங்கொடை வைத்தியசாலையில் சேர்க்கப்பட வேண்டியவர்களை, நாட்டின் நலனைக் கவனிக்கக் கூறி, அரசாங்கம் அமைச்சராக விட்டுள்ளது எப்படி பொருத்தமாகுமெனவும், அவர் வினிவினார்.

அத்துடன், தேர்தல் என்றால் தமிழர்கள் அனைவரும் ஒற்றுமையாக இருந்து தேர்தலை சந்திப்பதுதான் பொருத்தமான விடயமெனத் தெரிவித்த அவர், தமிழர்களின் வாக்குகள் சிதறடிக்கப்படும் போது, நிச்சயமாக தென்னிலங்கை வாசிகளுக்கோ அல்லது ஏனையவர்களுக்கோ தான் சாதகமாக அமையுமெனவும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .