2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

விருந்தினர்களால் காத்திருந்த மாணவர்கள்

Niroshini   / 2020 டிசெம்பர் 29 , பி.ப. 06:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி - கண்டாவளைக் கல்விக் கோட்டத்தில் உள்ள பாடசாலையொன்றில் ஏற்பாடு செய்யப்பட்ட தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களை கௌரவமளிக்கும் நிகழ்வில், விருந்தினர்கள் நேரம் தாழ்த்தி வந்ததால், பலரிடையே விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

கண்டாவளை கல்விக் கோட்டத்துக்கட்பட்ட பிரபல பாடசாலை ஒன்றில், நேற்று (28), தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது.

இந்நிகழ்வுக்கு, உதவிக் கல்விப் பணிப்பாளர், கோட்டக் கல்வி அதிகாரி உள்ளிட்ட  உயர் அதிகாரிகள் விருந்தினர்களாக அழைக்கப்பட்டிருந்தனர்.

இந்த நிகழ்வு, காலை 11 மணிக்கு நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதும், குறித்த அதிகாரிகள்  உரிய நேரத்துக்குச் சமூகமளிக்காது, மாறாக பிற்பகல் 12.37 மணிக்கே வந்தனர்.

பின்னர், பிற்பகல் பகல் 12.45 மணிக்கு நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டன.

இவர்களது வருகைக்காக  குறித்த பாடசாலை மாணவர்கள்  பெற்றோர்கள், அரச உத்தியோகத்தர்கள், நலன் விரும்பிகள் காத்திருந்தமையானது, பலரையும் விசனத்துக்கு உள்ளாக்கியுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .