2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

‘விஷஜந்துகளிடம் இருந்து பாதுகாத்துக் கொள்ள என்ன வழி?’

Editorial   / 2019 ஓகஸ்ட் 23 , பி.ப. 06:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

வயல் அறுவடையின் பின்னர் வயல் நிலங்கிளில் தீ மூட்ட வேண்டாம் என அறிவிக்கும் அதிகாரிகள், வயல் நிலங்களில் காணப்படுகின்ற கிருமிகள், விஷ ஜந்துகளிடம் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான வழிகளை கூறுங்கள் என அக்கராயன் விவசாயிகள் அதிகாரிகளிடம் வினா எழுப்பியுள்ளனர்.

நேற்று, அக்கராயன் நாகதம்பிரான் கமக்கார அமைப்பு புதிய நிர்வாகத் தெரிவு நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்து கொண்ட அதிகாரிகள் வயல் நிலங்களில் அறுவடை முடிந்தவுடன் தீ மூட்ட வேண்டாம் என அறிவுறுத்தியபோதே, விவசாயிகள் மேற்கண்டவாறு வினவினர்.

தொடர்ந்துரைத்த விவசாயிகள், பயிர்ச் செய்கைக்குப் பின்னர் கிருமிகள் வயல் நிலங்களில் நிறைந்து காணப்படுகின்றன. அத்துடன், பாம்புகள் உட்பட விஷ ஜந்துகளால் ஆபத்துகள் காத்திருக்கின்றன எனவும் தெரிவித்தனர்.

கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக வயல் நிலங்களுக்கு தீ மூட்டுவதன் மூலமே நிலப்பண்படுத்தலை முன்னெடுத்து வந்தோம். இந்நிலையில், வருகின்ற புதிய நடைமுறைகளை நடைமுறைப்படுத்துவதால், வயல் நிலங்களில் காணப்படுகின்ற கிருமிகள், விச ஜந்துகளில் இருந்து பாதுகாப்புத் தேடிக் கொள்வது எப்படி என அதிகாரிகள் விவசாயிகளுக்கு விளக்கம் அளிக்க வேண்டும் எனவும், விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .