Shanmugan Murugavel / 2022 ஜனவரி 11 , மு.ப. 11:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
- செ. கீதாஞ்சன், சண்முகம் தவசீலன்

முல்லைத்தீவு மாவட்டத்தில் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் வீடற்ற குடும்பங்களுக்கு வீட்டுத்திட்டம் ஒன்றைக் கட்டிக் கொடுக்கும் முயற்சியில் ஐக்கிய மக்கள் சக்தியின் முல்லைத்தீவு மாவட்ட பிரதான அமைப்பாளர் லக்ஷயனால் முன்னெடுக்கப்பட்டு தொடங்கிவைக்கப்பட்டுள்ளது.
இந்த வீட்டுத் திட்டங்கள், முல்லைத்தீவு மாவட்டத்தில் கிராமத்துக்கு ஒரு வீடு என்ற திட்டத்தின் கீழ் ஆதர்சம் அறக்கட்டளை ஊடாக 100 வீடுகள் அமைத்துக் கொடுக்கப்படவுள்ளது.
வீடு அமைத்து கொடுக்கும் தொடக்க நிகழ்வு ஒட்டுசுட்டான் பிரதேசத்துக்கு உட்டபட்ட முத்துஜயன் கட்டு ஜீவனநகர் கிராமத்தில் நடைபெற்றுள்ளது.
கடந்த 10 ஆண்டுகளுக்க மேலாக அரசாங்கத்தின் எந்த வீட்டுத் திட்டமும் கிடைக்காத குடும்பம் தெரிவுசெய்யப்பட்டு வீடு அமைத்துக்கொடுப்பதற்கான அடிக்கல் நாட்டிவைக்கப்பட்டுள்ளது.
அடிக்கல் நாட்டும் நிகழ்வில், ஐக்கிய மக்கள் சக்தியின் முல்லைத்தீவு மாவட்ட பிரதான அமைப்பாளர் லக்ஷயன் முத்துக்குமார் புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர் மு. முகுந்த கஜன், ஐக்கிய மக்கள் சக்தியின் இணைப்பாளர் நிஷாம் ஜமால்டீன், கிராம அலுவலகர் நன்னீர் மீன்பிடி சங்கத்தின் உறுப்பினர்கள், கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள், கிராம மக்கள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளார்கள்.
29 minute ago
6 hours ago
27 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
6 hours ago
27 Jan 2026