2025 ஓகஸ்ட் 08, வெள்ளிக்கிழமை

வீடு அபிவிருத்தி அதிகாரசபை மீது மக்கள் அதிருப்தி

க. அகரன்   / 2017 ஜூலை 03 , பி.ப. 03:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

வவுனியா கற்பகபுரம் கிராமத்துக்கு வழங்கப்பட்ட வீடு அமைப்பு அதிகாரசபையின் வீட்டுத் திட்ட நடவடிக்கைகள் குறித்து, அப்பகுதி மக்கள் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.

இது தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவித்ததாவது,

வவுனியா புதிய, பழைய கற்பகபுரம் கிராமத்துக்கு, 360 வீடுகள், வீடமைப்பு அதிகாரச பையால் வழங்கப்பட்டுள்ளது. சுமார் 500,000 ரூபாய் பெறுமதியான குறித்த வீட்டு கட்டுமானத்துக்குரிய பணம், கட்டம் கட்டமாக வழங்கப்பட்டு வருகிறது.

சீமெந்து, வீட்டுக் கூரை சீற் என்பன, பொருட்களாக வீடமைப்பு அதிகாரசபையால் வழங்கப்படுவதுடன், அதற்குரிய பணத்தைக் கழித்து விட்டு, மிகுதிப் பணத்தையே, பயனாளிகளின் வங்கிக் கணக்குக்கு வைப்புச் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த பகுதியில் வசிக்கும் மக்கள், வீடு திருத்த வேலைக்காக, வீடமைப்பு அதிகார சபையிடம், 100,000 ரூபாய் பணத்தைக், கடனடிப்படையில், மாதாந்தம் செலுத்தும் வகையில், முன்னர் பெற்றுக் கொண்டனர். தற்போது வீட்டுத் திட்டத்துக்காக வழங்கப்படும் பணத்தில், குறித்த கடன் தொகை 100,000 ரூபாயையும் அதற்குரிய வட்டியையும், வீடமைப்பு அதிகாரசபையினர் கழித்து விட்டே மீதிப் பணத்தை வழங்குவதாகவும், இதனால் தம்மால் வீடுகளை முழுமையாக பூர்த்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

தமக்கு வழங்கப்பட்ட கடனை இதில் கழிக்காது, அவற்றை ஏற்கெனவே கூறியபடி மாதாந்தம் அறிவிடும் படியும் அம்மக்கள் கோரியுள்ளதுடன், இது தொடர்பில் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளதுடன் தகவல் அறியும் உரிமைச் சட்டம் ஊடாகவும் இது தொடர்பில் வினவியுள்ளனர்.

இதனால் குறித்த அதிகாரிகள், தம்மை பழிவாங்குவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளதுடன், தமக்காகக் கொண்டுவரப்பட்ட சீமெந்து உள்ளிட்ட பொருட்களையும் வழங்காது மீள திருப்பிக் கொண்டு சென்று விட்டதாகவும் அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் வவுனியா வீடமைப்பு அதிகார சபையின் முகாமையாளர் திருமதி வி.எம்.வி.குரூஸிடம் வினவியபோது,

“வீட்டு அறை கட்டுவதற்காகவே கடன் வழங்கப்பட்டது. தற்போது அவர்களுக்கு வீட்டுத் திட்டம் மானியமாக வழங்குவதால், அதில், அந்தப் பணத்தைக் கழித்து விட்டு, மிகுதிப் பணத்தை வழங்கி, அந்த வீடு பூர்த்தி செய்யப்படுகிறது. கடன் அவர்களின் விருப்பத்துடனேயே அறவிடப்படுகிறது. அவர்களால் அனுப்பப்பட்ட தகவல் அறியும் விண்ணப்பம் கடந்த சனிக்கிழமையே (01) கிடைத்தது. இன்னும் அதற்கு பதில் வழங்கவில்லை. எமது அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் மிகவும் கஷ்டப்பட், அந்த மக்களுக்காகப் பணி புரிறார்கள். எந்தப் பழிவாங்கலும் இடம்பெறவில்லை. இன்றும் அவர்களுக்கு சீமெந்து வழங்கப்படுவதாகவும் தாம் சீராக வழங்குவதனாலேயே, அவர்கள் வீடுகளை கட்டி வருவதாகவும்” அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .