Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 01, வியாழக்கிழமை
Niroshini / 2020 டிசெம்பர் 31 , பி.ப. 06:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராசா கிருஸ்ணகுமார்
கிளிநொச்சி - கண்டாவளை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பகுதியில், தேசிய வீடமைப்பு அதிகாசரபையால் கட்டப்பட்ட வீடுகளை, மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவின் இணைப்பாளர் வை.தவநாதன் பயனாளிகளுக்கு உத்தியோகபூர்வமாக வழங்கிவைத்தார்.
கண்டாவளை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட ஊறியான், புன்னைநீராவி, தர்மபுரம் மேற்கு, கல்மடு நகர் ஆகிய கிராமங்களிலுள்ள பயனாளிகளுக்கே, இன்றைய தினம் (31), இந்த வீடுகளை தவநாதன் வழங்கிவைத்தார்.
பயனாளிகளுக்கு உத்தியோகபூர்வமாக வீடுகளைக் கையளித்ததுடன், அந்த வீடுகளுக்கான மின்சார விநியோகம், அருகாமையிலுள்ள வீதிகள் புனரமைப்பு மற்றும் மக்களின் இதர தேவைகள் குறித்தும் தவநாதன் கேட்டறிந்து, அவற்றை நிறைவேற்றுவதற்கான ஒழுங்குகளையும் செய்தார்.
இந்த நிகழ்வில், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் மேலதிக இணைப்பாளர் கோ.றுஷாங்கன், கண்டாவளை பிரதேச செயலாளர் த.பிருந்தாகரன், வீடமைப்பு அதிகாரசபையின் கிளிநொச்சி முகாமையாளர் சுகாஸ், கண்டாவளை நிர்வாக கிராம உத்தியோகத்தர் வின்ஸன்ட் போல், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் கண்டாவளை பிரதேச செயலக உத்தியோகத்தர் த.பார்த்தீபன், கிராம அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
24 minute ago
28 minute ago
6 hours ago